"இனி விஜய் தான் முதலமைச்சர்.." - தவெக விழாவில் விஜயைப் புகழ்ந்த நாங்குநேரி மாணவன் சின்னத்துரை..! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2023 - 2024 ம் ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று  இடங்களைப் பிடித்து சாதனை படைத்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் பரிசு வழங்கும் விழா சென்னையில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. 

இதில் இன்று முதற் கட்டமாக நடைபெறும் விழாவில் 800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு ஊக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி வருகிறார். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு உள்ளான 12ம் வகுப்பு மாணவர் சின்னத்துரைக்கும் தவெக தலைவர் விஜய் சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசினை வழங்கினார். 

மாணவர் சின்னத்துரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாணவர் சின்னத்துரைக்கு பரிசினை வழங்கிய தவெக தலைவர் விஜய், பின்னர் மாணவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

இதையடுத்து பேசிய மாணவர் சின்னத்துரை, "தலைவர் விஜய் முதலில் வந்ததுமே எனக்கு அருகில் அமர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்போதே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விஜய், முதலமைச்சராக ஆனால் இன்னும் நிறைய, நிறைய செய்வார் என்று எதிர் பார்க்கலாம். இனி விஜய் தான் அடுத்த முதலமைச்சர்" என்று புகழ்ந்து பேசினார். 

முன்னதாக விஜய் மாணவர் சின்னத்துரை அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nanguneri Student Chinnadurai Speaks About Vijay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->