டாஸ்மார்க் வருமானத்தில் அரசு | வேதனைக்குரியது அல்ல வெட்கக்கேடானது - நாராயணன் திருப்பதி! - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்ததாவது, "தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம்  கிடைக்கும் வருமானத்தில் தான் தமிழக அரசு இயங்கி வருவதாக சிலர் சொல்லுவது வேதனை அளிக்கிறது.

தானியங்கி எந்திரம் மூலம் மது வழங்குவது 24 மணி நேரமும் செயல்படுவதில்லை. பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இந்த இயந்திரங்கள் செயல்படுகின்றன. இப்படி இருக்க 24 மணி நேரமும் செயல்படுவதுபோல உண்மைக்கு மாறான, தவறான தகவல்களை செய்திகளாக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அரசை நடத்த வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை. அப்படியான செய்திகளை இனி யாராவது வெளியிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை பாயும்.

கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்களிடமிருந்து 5.5 கோடி ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டு இருக்கிறது" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

டாஸ்மாக் வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையாக நடந்து வருவதாக செந்தில் பாலாஜி கூறுகிறார். ஆனால், நுகர்வோருக்கு 'பில்' கொடுக்காமல் விற்பனை செய்வது நேர்மையல்ல, சட்ட விரோதம். வெளிப்படைத்தன்மையல்ல கள்ளச்சந்தை.

டாஸ்மாக் வருமானத்தில் அரசு நடப்பதாக கூறுவது வேதனைக்குரியது என்கிறார் செந்தில் பாலாஜி. ஆனால், அது வேதனைக்குரியது அல்ல வெட்கக்கேடானது" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NARAYANAN THIRUPATHY REPLY TO SENTHIL BALAJI TASMAC ISSUE


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->