குடியரசுத் தினம் : சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் கொடி ஏற்றம்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நாட்டில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், ஜனவரி 26 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் 74 ஆவது குடியரசு தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழாவை முன்னிட்டு நாட்டின் தலைநகரான டெல்லியில் மிக பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் பங்கேற்று வெகு சிறப்பாக கொண்டாடியது   

இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடியரசுத் தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடியை வெள்ளி தாம்பாலத்தில் வைத்து ஸ்ரீநடராஜ பெருமான் பாதத்தில் சமர்பித்து சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. 

அதன் பின்னர், தேசியக் கொடியை வெள்ளி தாம்பாலத்தில் வைத்து மேள தாளங்களுடன் கொண்டு வரப்பட்டு, 152 அடி உயர கிழக்கு கோபுரத்தின் உச்சியில் ஏற்றி பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

national flag on chthambaram natarajar temple gopuram for republic day


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->