அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வழக்கு - தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது பயின்று வரும் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து குற்றவாளியை மூன்று தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வந்த நிலையில் இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதை தொடர்ந்து போலீசார் இந்த பாலியல் குற்ற செயலில் ஈடுப்பட்ட மற்றொரு நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் எப்.ஐ.ஆரில் மாணவி கூறிய புகார்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பையை எற்படுத்தி இருந்தது. 

இந்த நிலையில் அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக மகளிர் ஆணையம் தெரிவித்ததாவது:- "சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பத்தொன்பது வயது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. 

இந்த கொடூரமான செயலை மகளிர் ஆணையம் கடுமையாக கண்டிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் நீதிக்கான போராட்டத்தில் உடன் நிற்கும். பாதிக்கப்பட்டவருக்கு இலவச மருத்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை BNS, 2023 இன் பிரிவு 71ஐ எப்.ஐ.ஆரில் சேர்க்கவும். அத்துடன், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியதற்காக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பழைய குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது வழக்கு இருந்தும் தமிழ்நாடு காவல்துறை முந்தைய வழக்குகளில் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. இந்த அலட்சியம் அவரை இதுபோன்ற குற்றங்களை செய்யத் தூண்டியது. இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைப் பற்றிய தீவிர கவலையை எழுப்புகிறது" என்று தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

national human rights commission of women takes up investigation student rape case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->