வசமாக சிக்கிய அமீர்.. மீண்டும் டெல்லிக்கு அழைத்தது NCB..!! - Seithipunal
Seithipunal


போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதித்துடன் நெருக்கமாக இருக்கும் இயக்குனர் அமீரை மீண்டும் விசாரணைக்கு வருமாறு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை அமிர்த பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள் வங்கி கணக்குகள் ஆவணங்களை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு கேட்டுள்ளது. 

ஜாபர் சாதிக்கு உடன் தொழில் பார்ட்னராக இணைந்தது எப்படி என்ற விவரங்களையும் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என அமீர் தரப்பிலிருந்து மத்திய போதை பருள் தடுப்பு பிரிவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

கடந்த முறை ஆஜரான இயக்குனர் அமீரிடம் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 11 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் தற்போது மீண்டும் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று காலை முதல் ஜாபர் சாதிக் மற்றும் அமீருக்கு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NCB again called director Ameer for investigation


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->