தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவன்.! கடிதத்தில் வெளிவந்த அதிர்ச்சி.!
near chennai college student sucide
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வடிவேல் மகன் சரண். பி.காம் படித்துள்ள இவர், சென்னை மயிலாப்பூரில் உள்ள ராக்கியப்பன் தெருவில் நண்பர்களுடன் சேர்ந்து வாடகை வீட்டில் தங்கி சி.ஏ. படித்து வந்தார்.
தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற சரண், நேற்று முன்தினம் தான் சென்னை திரும்பினார். அதன் பின்னர் அவரது பெற்றோர் அவரை பலமுறை செல்போனில் தொடர்புகொள்ள முயற்சித்தும் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர் சரண் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருக்கு தகவல் அளித்தனர்.
அதன் படி, வீட்டின் உரிமையாளர் சரண் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு அவர் வீட்டின் முன் கதவு அடைந்திருந்தது. அதன் பின்னர் ஜன்னல் வழியாக பார்த்த போது சரண், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இந்த சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சரணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த விசாரணையின் போது சரண் தனது பெற்றோரிடம் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்க விரும்புவதாகவும், சி.ஏ. படிக்க விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் சரணை சமாதானப்படுத்தி சி.ஏ. படிக்கும்படி அறிவுறுத்தி சென்னைக்கு அனுப்பி உள்ளனர்.
இதனால் மனம் நொந்து போன சரண், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, "அப்பா, அம்மா, தம்பி உங்கள ரொம்ப மிஸ் பண்றேன்" என்று எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near chennai college student sucide