காதலிக்கு திருமணம் ; தாலியை பிடுங்கி காதலி கழுத்தில் கட்ட முயன்ற காதலன் - தர்ம அடி வாங்கிய சோகம்! - Seithipunal
Seithipunal


தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். என்ஜினீயர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதிக்கும் கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயம் செய்தா நிலையில், இன்று அவர்களது திருமணம் நடைபெற்றது. 

இன்று காலை 6.30 மணிக்கு மேல் திருமண சடங்குகள் முடிந்து மணமேடையில் மணிகண்டனும், ரேவதியும் அமர்ந்து வேதமந்திரங்கள் முழங்க மணமகன் மணிகண்டன் தாலியை எடுத்து மணமகள் ரேவதியின் கழுத்தில் கட்ட தயார் ஆனார்.அவர்கள் அருகில் இருந்த ஒருவர் தலையி தட்டி விட்டதில் தாலி கீழே விழுந்தது. 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டனிடம் அந்த வாலிபர் எதிர்பாராமல் நடந்து விட்டதாக தெரிவித்து தாலியை எடுத்து கொடுப்பது போல் நடித்து ரேவதியின் கழுத்தில் கட்ட முயன்றார். அவரைத் தடுத்து நிறுத்திய உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவனை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து விசாரித்தனர். 

விசாரித்த போது இருவரும் காதலித்து வந்தது தெரிந்தது. பின்னர் திருமணம் நின்று அனைவரும் கவலையில் சென்றனர். சதீசும், ரேவதியும் ராயபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் வேலை பார்த்து வந்தபோது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.  இதற்கிடையே ரேவதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது பற்றி அறிந்ததும் சதீஷ் கவலை அடைந்தார். அவர் எப்படியாவது திருமணத்தில் புகுந்து கடைசியில் ரேவதியின் கழுத்தில் தாலி கட்டி விட வேண்டும் என்று திட்டமிட்டு உள்ளார்.

அதன்படி சதீஷ் நேற்றிலிருந்தே திருமண மண்டபத்தில் சுற்றி வந்துள்ளார். ரேவதியின் நண்பர் என்று கூறியதால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திய சதீஷ் இந்த சம்பவத்தை செய்துள்ளார்.

இதனால் இரு வீட்டாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருவீட்டாரையும் மற்றும் மணமகள், மணமகன், காதலன் ஆகிய 3 பேரையும் வரவழைத்து விசாரித்தனர். 3 பேரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறி வருவதால் இதில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் போலீசார் குழப்பத்தில் உள்ளனர். 

3 பேரின் எதிர்காலமும் பாதிக்காத வகையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திருமணம் நிச்சயித்த நாள் முதல் ரேவதி மணிகண்டனிடம் பேசி வந்துள்ளார். இதனால் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai lover stop marriage


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->