விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய முதியவர் -  ஒரு கோடி மதிப்புள்ள நகைகளை மீட்ட போலீசார்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் பாடி மேம்பாலத்திற்கு கீழே கோயம்பேடு நோக்கி செல்லும் சாலையில் நேற்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவருக்கு தலையில் அடிபட்டு மயங்கியபடி கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் யாரும் அவருக்கு முதலுதவி செய்ய முன்வராமல் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தபடி நின்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த மதுரவாயல் சட்டம்-ஒழுங்கு தலைமை காவலர் சிவஆனந்த் இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கீழே இறங்கி சென்று பார்த்தார். அதன் பின்னர் கீழே மயங்கி கிடந்த முதியவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை நிறுத்தி அதில் அந்த முதியவரை ஏற்றி அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். 

அந்த முதியவர் வந்த இருசக்கர வாகனத்தில் பை ஒன்று இருந்தது. அதனையும் தலைமை காவலர் சிவஆனந்த் பத்திரமாக எடுத்துச் சென்றார். முதியவர் மயக்க நிலையிலேயே இருந்ததால் அவரை பற்றிய தகவல்கள் ஏதும் உள்ளதா? என்று பையை எடுத்து பார்த்தப்போது, ரூ.1 கோடியே 41 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பில்லுடன் இருந்தன. மேலும் செல்போன் ஒன்றும் இருந்தது. 

அந்த முதியவர் சில மணி நேரமாக மயக்கம் தெளியாமலேயே இருந்ததனால் அவர் யார்? என்பதை கண்டுபிடிப்பதற்காக செல்போனில் கடைசியாக யாரிடம் பேசியுள்ளார் என்று பார்த்து போன் செய்து விசாரணை செய்தனர். அப்போதுதான் அந்த முதியவரின் பெயர் அரிகரன் என்பதும் இவர் மேற்கு மாம்பலத்தில் வசித்து வருவதும், தங்க நகைகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் சுமார் 6 ஆண்டுகளாக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. 

இவர், பிரபல நகை கடை ஒன்றிற்கு நகைகளை கொண்டு சென்றப்போதுதான் விபத்தில் சிக்கியுள்ளார். சரியான நேரத்தில் தலைமை காவலர் சிவஆனந்த் சம்பவ இடத்துக்கு சென்று அரிகரனின் உயிரை காப்பாற்றியதுடன் ரூ.1½ கோடி நகையையும் மீட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து போலீசார் நகை குறித்து விசாரணை மேற்கொண்டு உரியவர்களிடம் நகையை ஒப்படைத்தார். அதன்படி, நகை கடையில் இருந்து கதிரவன் என்பவர் வந்து நகையை பெற்றுக் கொண்டார். சரியான நேரத்தில் உதவி செய்து முதியவரையும், நகைகளையும் பத்திரமாக ஒப்படைத்த தலைமை காவலர் சிவஆனந்த் மற்றும் டிரைவர் தீபன் சக்கரவர்த்தியை கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai old man accident police inspecter rescue gold


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->