சென்னை மாதாவரத்தில் பள்ளி சிறுவர்களை தாக்கிய ஆசிரியர் கைது.!
near chennai teacher arrested for attack school students
சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு, அய்யர் தோட்டம் பகுதியில் உள்ள பகுதியில் சிறுவர்களை கொடுமைப்படுத்தி வருவதாகவும் அவர்கள் அழுதபடி சத்தம் போடுவதாகவும் அப்பகுதி மக்கள் கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ராஜாராமுக்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவலின் படி, உதவி கமிஷனர் ஆதிமூலம், மாதவரம் தலைமை காவலர் காளிராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு 8 வயது முதல் 10 வயது வரை உள்ள 12 சிறுவர்கள் குச்சி மற்றும் கைகளால் கடுமையாக தாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
உடனே அவர்களை மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அங்குள்ளவர்களிடம் விசாரணை செய்ததில்,
"பீகாரில் இருந்து சிறுவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு மத பாடம் எடுப்பதும், பாடத்தை சரியாக படிக்காதவர்களை கடுமையாக தாக்குவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ஆசிரியர் அப்துல்லா, கட்டிட பராமரிப்பாளர் அக்தர் உள்ளிட்ட இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
near chennai teacher arrested for attack school students