அளவுக்கு மீறி "சிக்கன் ரைஸ்" சாப்பிட்ட இளைஞர் மரணம்.!  - Seithipunal
Seithipunal


சென்னை வியாசர்பாடியில் உள்ள எஸ்.ஏ. காலணி எட்டாவது தெருவை சேர்ந்தவர் மகாவிஷ்ணு. இவர் நேற்று இரவு நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு மது குடித்துள்ளார். அதன் பிறகு 'சிக்கன் ரைஸ்' சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்து தூங்கினார். 

இதையடுத்து, அன்றிரவு 12 மணியளவில் மகாவிஷ்ணுவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்தனர். அங்கு மஹாவிஷ்ணுவின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனை கேட்ட அவரது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து, மகாவிஷ்ணுவின் சாவுக்கு காரணம் என்னவென்று தெரியாமல் தவித்தனர்.

இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் படி போலீசார், மது குடித்துவிட்டு 'சிக்கன் ரைஸ்' சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai young boy died for unlimited chicken rice eat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->