பெண்ணுக்கு அந்தரங்க படங்களை அனுப்பி உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே உள்ள திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தியாகராயநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த பெண்ணுடன் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த புதுப்பேட்டையை சேர்ந்த அரவிந்தசாமி என்பவர் நட்பாக பழகி வந்தார்.

இதற்கிடையே, இளம்பெண் அலுவலகம் தொடர்பாக ஒரு தேர்வுக்கு சென்ற போது தனது செல்போனை, நண்பரான அரவிந்தசாமியிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன் படுத்திய அரவிந்தசாமி இளம்பெண்ணின் செல்போனை ஆன் செய்துள்ளார்.

அதில், இளம்பெண் தனக்கு இருந்த தோல் வியாதி தொடர்பாக மருத்துவரிடம் காண்பிப்பதற்காக தனது உடலை படம் எடுத்து வைத்து இருந்தார். இதைபார்த்த அரவிந்தசாமி அந்த புகைப்படங்களை திருடி தனது செல்போனுக்கு அனுப்பிக்கொண்டார். 

அதன் பின்னர், அரவிந்தசாமி அந்த நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு சென்று, கரூர் மாநகர காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், அரவிந்தசாமி கடந்த சில நாட்களாக, இளம்பெண்ணின் செல்போனுக்கு அவரது அந்தரங்க படங்களை அனுப்பி உல்லாசத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். 

அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணிடம் ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இல்லை என்றால் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த இளம்பெண் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரின் படி, போலீசார் விசாரணை நடத்தியதில் அரவிந்தசாமி இளம்பெண்ணின் புகைப்படத்தை காட்டி மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near chennai young man arrested for intimate picture send to young woman


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->