கோவை : திருமணம் ஆகாததால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவதாஸ். இவர் ஈச்சனாரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறாததனால், மனவேதனையில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், இவர் கடந்த திங்கள்கிழமை தனது சகோதரரிடம் மதுரைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் இவர் மதுரைக்கு செல்லாமல் கோயம்புத்தூரில் உள்ள ரெயில் நிலையத்திற்கு அருகே ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். 

இதையடுத்து திருமணம் ஆக வில்லை என்ற மன உளைச்சலில் சிவதாஸ் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்து கொண்டு மூன்று நாட்கள் ஆனதால் அவரது அறையில் இருந்து தூர் நாற்றம் வீசியது. 

இதில் சந்தேகம் அடைந்த லாட்ஜ் மேலாளர் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். 

அங்கு போலீசார் பிணமாக கிடந்த சிவதாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து  ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near coiambatore young man sucide in lodge


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->