கிராப்புறங்களில் தான் வன்கொடுமை அதிகரித்துள்ளது - மகளிர் ஆணையத்தலைவி  பேச்சு.! - Seithipunal
Seithipunal


நேற்று கோவை மாவட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பெண் மேயர்கள், துணை மேயர்கள் மற்றும் உள்ளாட்சி பெண் பிரதிநிதிதிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி தொடங்கியது. 

இந்த பயிற்சியில் கோவை, திண்டுக்கல், வேலூர், மதுரை, ஈரோடு, தாம்பரம் காஞ்சிபுரம், கரூர், கடலூர், சிவகாசி உள்ளிட்ட மாநகராட்சிகளை சேர்ந்த பெண் மேயர்கள், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த பயிற்சியில், மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ் குமாரி பேசிய போது தெரிவித்ததாவது:- "மகளிர் ஆணையம் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை.

ஆணையத்தின் முதன்மையான பணி என்னவென்றால், பெண்களுக்கான சட்டங்கள், உரிமைகள் போன்றவற்றை பாதுகாப்பது தான். மகளிர் ஆணையத்திற்கு, பெண்கள் பிரச்சினைகள் குறித்து கிராமப்புறங்களில் இருந்து தான் அதிக அளவில் மனுக்கள் வருகின்றன. 

தமிழகத்தில் மட்டும் 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக திகழ வேண்டும் என்பதே முதலமைச்சரின் விருப்பமாக உள்ளது. அந்த வகையில் பல துறைகளில் பெண்கள் அனைத்து பொறுப்புகளிலும் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். 

இதையடுத்து, மகளிர் ஆணையத்துக்கு பல்வேறு மனுக்கள் வருகின்றன. அதன் படி பார்க்கும் போது, குடும்ப வன்கொடுமை குற்றங்களில் சிக்கி பல பெண்கள் தவிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் தான் குடும்ப வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. 

அதுமட்டுமல்லாமல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தான் தற்போது அதிகரித்து வருகிறது. இது மிகுந்த கவலை அளிக்கிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பெண்களுக்கு நல்ல பாதுகாப்பு உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near coimbatore woman representative capacity building training


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->