கடலூர் மக்களே... நியாய விலைக்கடைகளில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு..! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் பணிக்காக நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள், தகுதிவாய்ந்த விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் மொத்தம் 245 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கான தகுதியாக, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு ஊதியமாக நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை மாதம் ரூ.6,250 வழங்கப்படும்.

ஓராண்டுக்குப் பின்னர் ஊதிய விகிதம் ரூ.8,600 - 29,000 ஆக உயரும். இதற்கு பதிவிக்கும் விண்ணப்பத்தாரர் தமிழ் மொழியில் எழுதப் படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும், இந்த பணிக்கான வயதுவரம்பு 1.7.2022 தேதியின்படி18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 

மேலும் இந்த பணிகளுக்கு தேர்வு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் தங்களது கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பத்தாரர் சார்ந்துள்ள வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்படையிலும், தொடர்புடைய இதர அரசாணைகள் மற்றும் சட்டப்பிரிவுகளின் கீழ் வரும் முன்னுரிமைகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர். மேலும், தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். 

இதையடுத்து, அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் www.drbcud.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.11.2022.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near cuddalore salesmen work for fair price stores


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->