தருமபுரி : வெறிநாய் கடித்து ஒரே கிரமத்தைச் சேர்ந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டத்தில் உள்ள  பாலக்கோடு அருகே சி.எம்.புதூர் தெருக்களில் சுற்றி திரியும் வெறிநாய்கள் அந்த பகுதியை சேர்ந்த பெண் உட்பட ஏழு பேரையும், ஆடு மற்றும் மாடுகளையும், அதிலும் குறிப்பாக கறவை மாடுகளை குறி வைத்து கடித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இதையடுத்து, வெறி நாய்கள் கடித்து குதறியதில், காயமடைந்த ஏழு பேர் பாலக்கோடு அரசு மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்குநாள் வெறி நாய்களின் அட்டகாசம் தொடர்ந்துகொண்டே வருவகிறது. 

இதனால், கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே நடமாடுவதற்கு பயந்து, எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர். 

இந்நிலையில், சி.எம்.புதூர் கிராம மக்கள் சார்பில், பொதுமக்களையும், கால்நடைகளையும் கடித்து குதறி வரும் வெறி நாய்களை ஒழித்து கட்டி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று சிக்மாரண்டஅள்ளி ஊராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near dharmapuri seven peoples addmitted hospital for dog bit


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->