ஈரோடு : அவினாசி அருகே வீட்டின் சுவற்றில் மோதிய அரசு பேருந்து.!
near erode government bus hit in house wall crashed
அரசு பேருந்து ஒன்று ஈரோட்டிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்து நேற்று இரவு சுமார் 9.45 மணி அளவில் அவினாசியை அடுத்து வெள்ளியம் பாளையம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் தாறுமாறாக சாலையில் வந்துள்ளார். இதைப்பார்த்த பேருந்து ஓட்டுனர் அவர்மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை திருப்பியுள்ளார்.
இதில் எதிர்பாராதவிதமாக பேருந்து சாலையோரம் இருந்த ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றதில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இருப்பினும் வீட்டில் உள்ளவர்கள் எந்த விதமான காயமும் இல்லாமல் உயிர் தப்பினர்.
இந்த விபத்தில், பேருந்து ஒட்டுனர், நடத்துனர் மற்றும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கார்த்தி உள்ளிட்ட மூவருக்கும் கை, கால்களில் சிறிய காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அருகிலிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
near erode government bus hit in house wall crashed