கன்னியாகுமரி : கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்த பள்ளி வாகனம்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமியார்மடம் அருகே தனியார் பள்ளி பேருந்து ஒன்று மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்கு முயன்ற பள்ளி பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில், பேருந்தில் இருந்த மாணவர்கள் தங்களை காப்பற்று மாறு அலறியுள்ளனர். இந்த அலறல் சத்தம் கேட்டு அந்தவழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த பேருந்தில் இருந்த மாணவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினார். 

இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

அதன் பின்னர் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் பேருந்தில் சிக்கியிருந்த மாணவர்களை விரைந்து மீட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kanniyakumari private school bus accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->