ஊரை விட்டு தள்ளி வைத்ததால் வட்டாட்சியரிடம் குடும்ப அட்டையை ஒப்படைத்த குடும்பம்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் வெல்டிங் மிஷின் வைத்துக்கொண்டு கூலி வேலை செய்து வருகிறார்.

இவர் வேலிலேடிங் வேலை செய்வதால் அனைத்து சமூகத்தைச் சார்ந்த நண்பர்களையும் தனது கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளார். இது அங்குள்ள சிலருக்குப் பிடிக்காததால், கிராம பஞ்சாயத்தில் கூடி குமார் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க முடிவெடுத்து அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். 

இதனால், குமார் வீட்டிற்குச் செல்லும் தண்ணீர் குழாய் துண்டிக்கப்பட்டதோடு, எந்தக் கோயில்களிலும் அவர்களை அனுமதிக் கூடாது என்றும் சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் கொலை மிரட்டல் விடுத்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள்.

இதுகுறித்து காரணம் கேட்கும் பொழுது இது பஞ்சாயத்தின் முடிவு என்று தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி, கோயிலுக்காகக் குமார் கொடுக்கப்பட்ட பணத்தையும் அவரிடம் திருப்பி கொடுக்கப்பட்டதனால், அடிப்படை உரிமை கூட கிடைக்காத இந்த மண்ணில் வாழ்வதைவிடச் சாவதே மேல் என்று தனது குடும்பத்தோடு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து, வட்டாட்சியர் கோவிந்தராஜியிடம் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை என்று அனைத்தையும் திருப்பிக் கொடுத்துள்ளனர்.

அதன் பின்னர் வட்டாட்சியரிடம், "இதற்கு நீங்களும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காவிட்டால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் குறித்து வட்டாட்சியர் கோவிந்தராஜ், “நிச்சயம் உங்களுக்கு நீதியை பெற்றுத் தருகிறேன்” என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் உடனடியாக அந்தக் கிராமத்திற்குச் சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near krishnagiri family members ration card submited in RTO office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->