சாலையில் நின்ற வேன் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் பலி.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சந்துரு என்பவர் மினி வேன் ஒன்றை ஒட்டி வருகிறார். இவர் நேற்று இரவு மினி வேனில் மரசாமான்கள் ஏற்றிக் கொண்டு புழல் பகுதியில் இருந்து நெடுஞ்சாலை வழியாக தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். 

இவர் மதுரவாயல் அருகே சென்ற போது மினி வேனை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மினி வேன் மீது மோதினார். 

இந்த விபத்தில், தூக்கி வீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அருகிலிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்த வாலிபரை மீது அருகிலுள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசாருக்கு அவர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று சந்தேகம் எழுந்தது. மேலும் இந்த விபத்துக் குறித்து போலீசார் மினி வேன் ஓட்டுநர் சந்துருவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maduravayal two whealer accident young man died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->