நீலகிரி || 1922-ல் தொடங்கிய பள்ளிக்கு மூடுவிழா.! உயிர் தந்த முன்னாள் மாணவர்கள்..! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை அருகே நஞ்சநாடு பகுதியில் கடந்த 1922-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்ததால், அப்பள்ளியை கடந்த 2018-ம் ஆண்டு மூடுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருந்தது. 

இதை அறிந்த அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை ஒன்றை துவக்கி, அதில் சுமார் 20 லட்ச ரூபாய் நிதி திரட்டி பள்ளியை சீரமைத்து பள்ளியில் ஆங்கில வழி கல்வியை கொண்டு வந்துள்ளனர். 


இதையடுத்து, அம்மாணவர்கள் முதற்கட்டமாக தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதற்கு வசதியாக புதிய வேன் ஒன்றையும் வாங்கியுள்ளனர். 

இதன் மூலம் 2018-ல் வெறும் 17 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 170 ஆக அதிகரித்துள்ளது. தங்கள் பள்ளியை மூடுவிழாவில் இருந்து மீட்டு உயிர் தந்த முன்னாள் மாணவர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near neelakiri school close old students


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->