பென்னாகரம் அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து - 2 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் பகுதியில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பட்டாசு குடோன்கள் உள்ளது. இந்தக் குடோன்களில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வழங்க நாட்டு பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சிவகாசி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டி என்ற கிராமத்தில் பட்டாசு குடோன் ஒன்று உள்ளது. இந்த பட்டாசு குடோனில் இன்று காலை திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. 

இதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன் படி, போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த இரண்டு பெண்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், இந்த விபத்து நடைபெற்ற பகுதிக்கு மக்கள் செல்லவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near pennakaram two womans died for firecrakers explossion in gudone


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->