சேலம் : கோவிலுக்குச் சென்ற தாழ்த்தப்பட்ட இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக ஊராட்சி மன்றத் தலைவர்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள திருமலைக்கிரியில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 26ஆம் தேதி அன்று இரவு  தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பிரவீன்குமார் என்ற இளைஞர் சாமி கும்பிட வேண்டுமென்று தெரிவித்துள்ளார். அதற்கு அங்குள்ள மற்றொரு சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த இளைஞர் திரும்ப வந்துவிட்டார்.

இதுகுறித்த தகவலை மற்றொரு சமூக மக்கள், திமுகவின் சேலம் ஒன்றிய செயலாளரும் தற்போதைய திருமலைகிரி ஊராட்சி மன்றத் தலைவருமான மாணிக்கத்திடம் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, அவர் பெரிய மாரியம்மன் கோயில் முன்பு கடந்த 27ஆம் தேதியன்று காலை பஞ்சாயத்து கூட்டி, தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இளைஞர் பிரவீன்குமார் மற்றும் அவரது பெற்றோர்களை கோயிலுக்கு வரச்சொல்லுமாறு தகவல் தெரிவித்தார்.

அதன் படி, அவர்கள் கோயிலுக்கு வந்துள்ளனர். அங்கு, ஊராட்சி மன்றத் தலைவர், தாழ்த்தப்பட்ட இளைஞர் மற்றும் அவரது பெற்றோர்களை மற்றொரு சமூக மக்கள் முன்னிலையில் மிகக் கடுமையான தகாத வார்த்தைகளால், திட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளார். 

இதனை அங்குள்ளவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்துகின்ற குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விஷயம் சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், திமுக கட்சியைச் சேர்ந்த திருமலைக்கிரி ஊராட்சி மன்றத் தலைவர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒரு இளைஞரையும், அவரது பெற்றோரையும் பொதுமக்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டி சாதி வெறியோடு நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near salem dmk party Panchayat Council chairman Threat kill to sheduled youth for swami dharisam in thirumalakiri periya mariyamman temple


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->