தலித் மாணவர்களுக்கு திண்பண்டம் தராமல் திருப்பி அனுப்பிய கடைக்காரர் - வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வசிக்கும் இரு சமூகத்தினரிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் கரிவலத்திற்கு வந்த நல்லூர் போலீசில் புகார் அளித்தனர். 

அந்த புகாரில், ஒரு தரப்பினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தலித் மாணவர்கள் அங்குள்ள பெட்டிக்கடையில் திண்பண்டங்கள் வாங்க சென்றனர். 

அப்போது, "தங்கள் சமூகத்தினருக்கு பொருட்கள் வழங்ககூடாது" என ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாக தெரிவித்து, திண்பண்டம் வழங்க மறுத்து மாணவர்களை திருப்பி அனுப்பினார். இதனை வீடியோவாக எடுத்து இணையதளங்களில், வெளியிட்டார். 

இந்த சம்பவம் குறித்து, ராமச்சந்திர மூர்த்தி என்ற நபரை கரிவலம் வந்த நல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஞ்சாகுளம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near thenkaasi two communities fight before two years


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->