திருப்பத்தூர் || அமேசான் குடோனில் லட்ச கணக்கில் பொருட்கள் கொள்ளை.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் டவுன் புது கோவிந்தாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் குடோன் உள்ளது. 

இந்த குடோனில், அந்த நிறுவனத்தின் மூலமாக ஆர்டர் செய்யும் அனைத்து பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகிலேயே ரெயில்வே தண்டவாளம் அமைத்துள்ளது. 

அந்த பகுதியிலிருந்து நேற்று இரவு மர்ம நபர்கள் குடோனின் சுவற்றை கடப்பாரையால் துளையிட்டு கடைக்குள் புகுந்து அங்கிருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

இதையடுத்து, இன்று காலை குடோனுக்கு வந்த ஊழியர்கள் அங்கு சுவரில் துளையிட்டு கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர்  இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் டவுன் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். 

இந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள கைரேகைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டன. இதையடுத்து, குடோனில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near thirupathur amesan kudon laks things robbery


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->