காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்கள்.! சோதனையில் வெளிவந்த பகீர் தகவலால் இருவர் கைது.! - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி ரோடு அருகே ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் சிறுவர் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்டு மூன்று சிறுவர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  

இது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், திமுக அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அதிகாரிகள் அந்த காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இந்த சம்பவத்தில் நிர்வாகத்தின் அலட்சியம் இருந்தால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதே சமயம், திருப்பூர் காவல் ஆணையர் பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது, ''உணவுப் பாதுகாப்புத் துறை, காவல்துறை, வருவாய்த்துறை என்று அனைவருமே தீவிர விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

மேலும், காப்பகத்தில் சமைத்த ரசம், சாதம், ஊறுகாய் மற்றும் சமையலுக்கு பயன்படுத்திய நீர் உள்ளிட்டவற்றை சேகரித்து ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்து தான் இந்த விவகாரத்தில்  என்ன நடந்தது என்று சொல்ல முடியும்'' என்று தெரிவித்திருந்தார்.

தற்போது அந்த ஆய்விற்கான சோதனை வெளிவந்த நிலையில், உணவுப் பகுப்பாய்வு சோதனையில் சம்பந்தப்பட்ட உணவில் எந்தவிதமான நஞ்சும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி காப்பகத்தின் அறங்காவலர் மற்றும் பாதுகாவலர் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tirupur vivekananda trust childrens died two peoples arrest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->