தூக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்.! ஒருவர் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரணி எஸ்.பி.கோவில் தெருவைச்ச சேர்ந்தவர் பாபு. இவர் ஒரு பெயிண்டர். இவருக்கு  ரமேஷ், தேவராஜ் என்று இரண்டு மகன்கள். 

இதையடுத்து, அங்குள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில், ரமேஷ் 9-ம் வகுப்பும், தேவராஜ் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தங்களது வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். 

அப்போது பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை உணர்ந்த பாபு மின் விளக்கை போட்டு பார்த்தபோது பாம்பு ஒன்று நெளிந்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடேன தனது இரண்டு மகன்களையும் அருகில் இருந்த வீட்டில் கொண்டு சென்று பாதுகாப்பாக படுக்க வைத்தார்.

அதன்பிறகு, விரைந்து வந்த பாபு அந்த பாம்பை அடித்துக்கொன்றார். சிறிது நேரத்தில் மகன்கள் இருவரும் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். உடனடியாக அங்கு இருந்தவர்கள் ரமேஷ், தேவராஜ் இருவரையும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே ரமேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, தேவராஜ்க்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tiruvallur snake attack in school students


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->