தற்கொலை செய்ய விடுப்பு கேட்டு வாட்ஸப்பில் தகவல் அனுப்பிய போலீசார்.! விழுப்புரத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் துணைத் தலைமை காவலராக பணி புரிபவர் மகிபால். இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததால், கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். 

இதற்கிடையே மகிபால் நான் குற்றம் ஏதும் செய்யவில்லை. ஆயுதப்படையில் கடுமையாக வேலை வாங்குகிறார்கள். தனக்கு ஓய்வுபெற இன்னும் ஆறு மாத காலம் மட்டுமே உள்ளது. அதனால், என்னை மீண்டும் விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்" என்று உயர் அதிகாரிகளிடம் கேட்டு வந்தார்.

அதுமட்டுமல்லாமல், இந்த சம்பவம் தொடர்பாக அவர் எஸ்பியையும் நேரில் சந்தித்து பேச முயற்சி செய்துள்ளார். இருப்பினும் அவரால் முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மகிபால், நேற்று முன்தினம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் சூப்பிரண்டு அலுவலக போலீசாருக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, "நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். அதனால் எனக்கு ஒருநாள் விடுமுறை தாருங்கள் என்று தெரிவித்திருந்தார். 
இதைபார்த்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, அலுவலக போலீசாரை அனுப்பி மகிபாலை கண்டுபிடித்து சமாதானப்படுத்துவதற்கு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் படி, போலீசார் மகிபாலை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். இந்த நிலையில் போலீசார் விக்கிரவாண்டி காவல் குடியிருப்பில் இருந்த துணை தலைமை காவலர் மகிபாலை சந்தித்து சமாதானப்படுத்தினர். 

அதன் பின்னர், மகிபாலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வரவழைத்து அறிவுரை வழங்கினர். மேலும், அவரை விக்கிரவாண்டி காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்து உத்தரவிடபட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near vilupuram police officer said leave for sucide attempt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->