விருதுநகர் || பேச மறுத்த காதலி.! விபரீத முடிவு எடுத்த காதலன்.!
near viruthunagar girl friend avoide engineer boyfried sucide
விருதுநகர் மாவட்டம் டி.காமராஜர்புரத்தை சேர்ந்தவர் கோவில்பிச்சை. இவருடைய மகன் தேவகுமார். இவர் ஒரு என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் கடந்த ஒரு ஆண்டாக துபாயில் வேலை பார்த்து வந்தார்.
இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது தந்தையிடம் தான் விரும்பும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதற்கு அவரது தந்தையும் அந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதாகதெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்த பெண் கடந்த சில மாதங்களாக தேவகுமாருடன் பேச மறுத்துள்ளார். இதை தேவகுமார் தனது தந்தையிடம் தெரிவித்தது மட்டுமல்லாமல், மன உளைச்சலில் இருப்பதாகவும், தான் ஊருக்கு திரும்ப வேண்டும் என்றும் கேட்டதனால் கோவில்பிச்சையம் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதன்படி தேவகுமார் ஊருக்கு வந்ததும், தான் காதலித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று வருவதாக தெரிவித்து சென்றார். அங்கிருந்து திரும்பி வந்த அவர், அந்த பெண் தன்னிடம் பேச வேண்டாம் என்று கூறிவிட்டதாக தனது தந்தையிடம் தெரிவித்து மிகவும் வருத்தப்பட்டதால் தேவகுமார் ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவில் தேவகுமார் பெட்ரோல் கேனுடன் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதையறிந்த கோவில்பிச்சை பதறியபடி அங்கு சென்றார். ஆனால் கோவில்பிக்ஜ்ஹே செல்வதற்குள் தேவகுமார் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் பலத்த தீக்காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
English Summary
near viruthunagar girl friend avoide engineer boyfried sucide