மற்றொருவர் இடத்தைக் காட்டி 17 லட்சத்தை லம்பாக அடித்த கணவன்-மனைவி.!
near viruthunagar husband wife money money cheating
விருதுநகர் மாவட்டம் மாத்தி நாயக்கன்பட்டி பவித்ரா நகரை சேர்ந்த அற்புதராஜ், நெல்லை மாவட்டம் பேட்டையில் உள்ள புனித அந்தோணியார் தெருவை சேர்ந்த மகாலிங்கத்திடம் தனக்கு சொந்தமாக நெல்லை டவுனில் இடம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நம்பிய மகாலிங்கம் அந்த நிலத்தை வாங்குவதாக பேசினார். இந்நிலையில், அற்புதராஜ் அதற்கு ஒப்புக்கொண்டதன் பின்னர் முன்பணமாக அற்புதராஜ் வீட்டில் வைத்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை மகாலிங்கம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, ஒரு செண்டுக்கு ரூ.8 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு மொத்த இடத்திற்கு ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்தை மகாலிங்கம் காசோலை மூலம் அற்புதராஜூக்கு கொடுத்துள்ளார்.
இந்த பணத்தை பெற்றுக்கொண்ட அற்புதராஜ் இடத்தை பதிவு செய்து தர முன்வரவில்லை. இதனால் சந்தேகபட்ட மகாலிங்கம், நெல்லை சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று விசாரித்தார். அங்கு அந்த இடம் மற்றொருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
அற்புதராஜ் தன்னை ஏமாற்றியதை உணர்ந்த மகாலிங்கம், பணத்தை திருப்பி தருமாறு அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அற்புதராஜ் பணத்தை தர மறுத்தது மட்டுமல்லாமல், ரவுடியை வைத்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.
இந்த பண மோசடி குறித்து மகாலிங்கம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
English Summary
near viruthunagar husband wife money money cheating