நீட் தேர்வுக்கு எதிராக திமுக தொடர்ந்து செயல்படும் - திமுக எம்பி கனிமொழி உறுதி!
NEET issue DMK MP Kanimozhi Speech
“நீட் தேர்வு விலக்குக்கு தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பதாக திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி தெரிவித்தாவது, "இந்தியா முழுவதும் எத்தனை மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை பார்க்கிறோம்.
நீட் தேர்வு விலக்குக்கு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். நீட் தேர்வுக்கு எதிராக திமுக தொடர்ந்து செயல்படும்.
திமுக தன்னுடைய கொள்கைகளை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்காது. 10 ஆண்டு காலமாக பாஜகவின் பல மசோதாக்களை எதிர்த்து இருக்கிறோம்.
சிறுபான்மையின மக்களை, அரசியல் சாசனத்தை, சட்டத்தை, சமூக நீதியை, இந்தியாவை காக்கக்கூடிய வகையில் திமுகவின் நாடாளுமன்ற செயல்பாடுகள் இருக்கும்.
English Summary
NEET issue DMK MP Kanimozhi Speech