சிபிசிஐடி போலீசாரின் திறமையற்ற விசாரணை: சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும் - எச்சரித்த உயர்நீதிமன்றக்கிளை! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது, 

அப்போது நீதிபதி, மோசடியாக தேர்வெழுதிய நபர்களின் ஆதார் விபரங்களை ஏன் வழங்கவில்லை? என்று மத்திய அரசு தரப்பு வழங்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்க்கு, ஆதார் கட்டாயம் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று மத்திய அரசு வழக்கறிஞர் பதிலளித்தார்.

இதற்க்கு நீதிபதி அவர்கள், அப்படி என்றால்,  ஆதார் என்பது ஏழை விவசாயிகளிடம் மட்டும்தான் கேட்பீர்களா? தேர்வெழுத வரும் மாணவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய என்ன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறீர்கள்?

இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரின் திறமையற்ற விசாரணையை, தேசிய தேர்வு முகமை சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளது. வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும் என்று எச்சரித்தார்.


இதற்கிடையே, நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு  பரபரப்பு தீர்ப்பு ஓன்றை வழங்கியுள்ளது.

போதுமான தரவுகள் இல்லை, நீட் தேர்வில் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் மீறும் வகையில் முறைகேடு நடைபெறவில்லை என்று உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், நீட் மறுதேர்வு, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம்  தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

ஹசாரிபாக், பாட்னாவில் தேர்வு மைய முறைகேடுகள் மூலம் 155 பேர் பயனடைந்துள்ளனர். இந்த காரணத்திற்காக மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது 23 லட்சம் மாணவர்களை பாதிக்கும் என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEET Scam 2019 Chennai HC Case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->