நீட் தேர்வால் கடலூர் மாணவி தற்கொலை! தொடரும் சோகம்!
NEET Student Suicide IN train Vadalur
கடலூர் மாவட்டம், நெய்வேலி நகரியத்தைச் சேர்ந்த என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளியான உத்திராபதியின் மகள் நிஷா.
இவர் கடந்த ஆண்டு நீட் நுழைவுத்தேர்வை எழுதி உள்ளார். ஆனால், அவரால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை.
இதனை தொடர்ந்து நடப்பாண்டில் மீண்டும் நீட் தேர்வு எழுதும் நோக்கத்துடன், நெய்வேலி இந்திரா நகரில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் மாணவி நிஷா பயிற்சி பெற்று வந்தார்.
இதற்கிடையே,அண்மையில் பயிற்சி மையத்தால் நடத்தப்பட்ட நீட் மாதிரி தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனம் உடைந்த மாணவி நிஷா, நேற்று வடலூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

முன்னதாக கடந்த மாதம் 27-ஆம் தேதி, சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மாபாளையத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவன் சந்துரு, நீட் தோல்வி அச்சத்தால் பயிற்சி மையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று மாணவி நிஷா தற்கொலை செய்துகொண்டுள்ளார். நடப்பாண்டில் மாட்டும் நீட் தேர்வு தோல்வி அச்சம் காரணமாக இரு உயிர்கள் பலியாகியுள்ளது.

முன்னதாக திமுக, திமுக தலைவர், இளைஞரணி தலைவர் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு இருக்காது, ரத்து செய்து விடுவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
NEET Student Suicide IN train Vadalur