#தமிழகம் || கார் வைத்திருக்கும் பெற்றோர்களே உஷார்..., நெல்லை அருகே 3 குழந்தைகள் கொடூரமாக பலியான சோகம்.!
nellai car door lock accident
நெல்லை: பணகுடி லெப்பை குடியிருப்பு பகுதியில் காருக்குள் விளையாடிக்கொண்டிருந்த மூன்று குழந்தைகள், காருக்குள்ளேயே சிக்கி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
லெப்பை குடியிருப்பு கிராமத்தில் நாகராஜன் என்பவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக, தனக்கு தெரிந்தவரிடம் கார் ஒன்றை வாங்கி வந்துள்ளார். வீட்டின் முன்பு அந்த கார் நின்றுகொண்டிருந்தது.

இந்த காரில் இவருடைய மகன் மற்றும் மகள், பக்கத்து வீட்டை சேர்ந்த குழந்தை என மூன்று பேரும் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.
இன்று மதியம் இந்த மூன்று குழந்தைகளும் காணவில்லை என்று பெற்றோர்கள், அந்த பகுதி முழுவதும் தேடி உள்ளனர். அப்போது குழந்தை தேடுவதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், குழந்தை காரில் விளையாடி கொண்டிருப்பதை நான் பார்த்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த காரை திறந்து பார்த்தபோது மூன்று குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தனர். காரின் அனைத்து ஜன்னல் கண்ணாடிகளும் மூடி இருந்தாலும், மூடியிருந்த கதவை திறக்க முடியாமல் குழந்தைகள் உள்ளே மாட்டிக் கொண்டதும் பின்புதான் தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மதியம் காணாமல் போன குழந்தைகளை மாலை வரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், காரில் அவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும், மூன்று குழந்தைகளின் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
nellai car door lock accident