நெல்லை மக்களே.. கட்டணமின்றி "புதிய ஆவணங்கள்" பெறலாம்.! ஆட்சியர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தென் மாவட்டங்களான தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த மாதம் கொட்டி தீர்க்க அதிக கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் நீர் சூழ்ந்தது. தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியனர். இந்த வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் தங்களது முக்கிய ஆவணங்களை பறி கொடுத்தனர். இந்நிலையில் வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெற சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

இது தொடர்பாக கூறிய அவர் "மழை வெள்ளத்தால் ஆவணங்களை இழந்தவர்களுக்கென வாரத்தில் திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு புதிய ஆவணங்கள் வழங்கப்படும். நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வருவாய் ஆட்சியர்கள் அலுவலகங்களிலும் திங்கள்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள் மூலம் புதிய ஆவணங்கள் பெற கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது" என அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nellai collector announced spl camp every monday get new documents free of cost


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->