நெல்லை கிறிஸ்துவ கல்லூரி மாணவியை மது விருந்துக்கு அழைத்த பேராசிரியர்கள் பணிநீக்கம்! ஒருவர் கைது! - Seithipunal
Seithipunal


நெல்லை தூய சவேரியார் கல்லூரி மாணவியை மது விருந்துக்கு பேராசிரியர்கள் அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் தூய சவேரியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி அரசின் நிதியுதவியுடன் இயங்கிவருவதாக சொல்லப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் இந்த கல்லுரியில் பயின்று வரும் நிலையில், ஒரு மாணவியை இரண்டு பேராசியர்கள் மது விருந்துக்கு அழைத்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மாணவி அளித்த புகாரின் பேரில் இரண்டு பேராசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பேராசிரியர் செபஸ்டியான் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இந்நிலையில், மாணவியை மது விருந்துக்கு அழைத்த இரண்டு பேராசியர்களையும் நிறைந்த பணிநீக்கம் செய்து கல்லுரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai college girl complaint Professor dismissed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->