கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நெல்லை மாணவி.! கடிதத்தில் வெளியான அதிர்ச்சி காரணம்.! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டம், களக்காடு பகுதிக்கு அருகே உள்ள ராஜலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகள் பாப்பா. இவர் நெல்லை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி பட்டப்படிப்பிற்கு சேர்ந்துள்ளார்.

மகளின் கல்லூரி கட்டணம் ரூ.12 ஆயிரத்தை முத்துக்குமார் இரண்டு தவணைகளாக செலுத்தினார். தனது படிப்பு செலவிற்காக பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு பணம் செலுத்தியதை எண்ணி மாணவி பாப்பா மன வேதனை அடைந்தார். 

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த மாணவி பாப்பா, வீட்டின் கதவை உள்புறமாக பூட்டி விட்டு  துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதன் பின்னர், காவல்துறையினர் மாணவியின் கைப்பையை சோதனை செய்தபோது தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதிய கடிதம் சிக்கியது. 

அதில் அவர் தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்களை சிரமப்படுத்தி விட்டதால் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளதாக எழுதி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nellai college student pappa suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->