திமுக பிரமுகரிடம் திருடிய பலே கில்லாடிகள்.! ஆந்திர விரைந்த தமிழக போலீஸ்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி : பாளை மகாராஜநகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவ அய்யப்பன் (தி.மு.க. பிரமுகர்). இவரிடம் தியாகராஜநகரை சேர்ந்த துரை என்பவர் கார் ஓட்டுநராக பணிசெய்து வந்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று, இவர் பாளையில் உள்ள  வங்கிகளில் பரமசிவ அய்யப்பனின் சேமிப்பு கணக்கில் இருந்து  ரூ.17 லட்சத்தை எடுத்துள்ளார். பின்னர், துரை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள வங்கிக்கு பணத்தை காரில் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார். 

பின்னர் வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு ரூ.17 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

மேலும், வங்கி நுழைவு வாயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்  காட்சிகள் தெளிவாக இல்லை என்பதால், ஓட்டுநர் துரை, ஏற்கனவே பணம் எடுத்த 2 வங்கிகளும் உள்ள பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை தனிப்படையினர் ஆய்வு செய்தனர். 

அதில் 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர், காரை பின் தொடர்ந்து வந்தது தெரியவந்தது. மேலும், கொள்ளை கும்பல் பற்றிய தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை தேடிய போது, அந்த கும்பல் ஆந்திராவுக்கு தப்பி செல்வது தெரிய வந்துள்ளது.  தனிப்படை காவல்துறையினர் அவர்களை கைது செய்ய ஆந்திரா விரைந்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nellai dmk member money theft case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->