குற்றப்பரம்பரை அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடியவர் முத்துராமலிங்க தேவர் - உதயநிதி ஸ்டாலின் புகழாரம்! - Seithipunal
Seithipunal


வாய்ப்பூட்டு சட்டம், குற்றப்பரம்பரை சட்டம் போன்ற அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் புகழ் ஓங்கட்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்று அவருக்கு மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய நாட்டின் விடுதலைப்போரில் பங்கேற்று பல முறை சிறை சென்றவர் முத்துராமலிங்கத்தேவர்.

வாய்ப்பூட்டு சட்டம், குற்றப்பரம்பரை சட்டம் போன்ற அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடியவர் முத்துராமலிங்கத்தேவர்.

‘தமிழ்நாட்டின் நேதாஜி’ என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் போற்றப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 117-ஆவது பிறந்த நாள் மற்றும் 62-ஆவது குருபூஜை நாளில் அவரது பணிகளை போற்றுவோம் என்றும் , அவரது புகழ் ஓங்கட்டும்! என்று வாழ்த்து செய்தியில்குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muthuramalinga devar was a rebel who fought against the oppression of criminal lineage praise of udhayanidhi stalin


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->