நெல்லை ஜெயக்குமார் கொலை வழக்கு: சபாநாயகர் அப்பாவுக்கு நெருங்கிய திமுக புள்ளியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


கடந்த மே மாதம், நான்காம் தேதி திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் படுகொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 

அவரின் வீட்டு பின்புறம் உள்ள தோட்டத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

கடந்த 2 மாதங்களாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த கொலை வழக்கில் தற்போது வரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இந்த கொலைக்கு உண்டான காரணம்? கொலை செய்தவர்கள் குறித்த துப்பு எதுவும் போலீசார் கையில் சிக்கவில்லை என்றே தெரிகிறது.

இந்த நிலையில், ஜெயக்குமார் கொலை வழக்கு தொடர்பாக திமுக ஒன்றிய செயலாளர் ஜோசப் பென்சியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

சபாநாயகர் அப்பாவுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படும் திமுக ஒன்றிய கவுன்சிலர் ஜோசப் பென்சி மற்றும் ஜெயக்குமாரின் ஓட்டுநர் உள்ளிட்ட நான்கு பேரிடம் தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம், "ஜெயக்குமார் கொலை வழக்கில் தற்போது வரை ஒருவரை கூட போலீசார் கைது செய்யவில்லை. இது குறித்து நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai KPK Jayakumar case DMK Josaph CBCID


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->