நெல்லையில் 6 பேருக்கு அரிவாள் வெட்டு! ஒருவர் பலி! பதற்றம்... குவிக்கப்பட்ட போலீசார்! - Seithipunal
Seithipunal



திருநெல்வேலியில் ஆறு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

நெல்லையில் இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஆறு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மலையாள மேடு பகுதியில் இரண்டு தரப்பினருக்கிடையே முன் விரோதம் காரணமாக இன்று காலை மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டு தரப்பு மோதலில், இரண்டு தரப்பை சேர்ந்த ஆறு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்து உள்ளது. 

இதில் படுகாயம் அடைந்த ஆறு பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். 

மேலும் ஐந்து பேர் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் இரண்டு தரப்பினரிடையே மேலும் மோதல் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai Malaiyala medu people clash one death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->