நெல்லையின் இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் உண்மை இல்லை - காவல்துறை தரப்பில் விளக்கம்!
Nellai poonul issue TNPolice
நெல்லையின் இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் உண்மை இல்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே இளைஞரின் பூணூலை நான்கு பேர் சேர்ந்த கும்பல் அறுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, நேற்று தமிழக அரசு, திமுக தலைவர், முதலமைச்சர் முக ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து தனது சமூகவலை பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
மேலும், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது திமுகவினர் தொடர்ந்து விமர்சித்து வந்ததன் எதிரொலியாக தான், நெல்லையில் பூணூல் அறுக்கும் அராஜக சம்பவம் அரங்கேறி இருப்பதாகவும் நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு இருந்தார்.
இந்த நிலையில், இப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பூணூல் அறுக்கப்பட்டதாக கூறிய இளைஞர் குறிப்பிட்ட அந்த நேரத்தில், சிசிடிவி காட்சிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அந்த நேரத்தில் இளைஞர் தெரிவித்தபடி பூணூல் அறுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
தவறான தகவலை அந்த இளைஞர் பரப்பி உள்ளதாகவும் நெல்லை காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
Nellai poonul issue TNPolice