#BigBreaking || நெல்லை கல்குவ்சரி விபத்தில் ஆறாவது நபரின் உடல்.., சற்றுமுன் வெளியான அதிர்ச்சி செய்தி.!
nellai quarry accident 6th member body find
திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான் குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் இடிபாடுகளில் சிக்கி நாங்குநேரி அருகே உள்ள காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 30), இளையநயினார்குளத்தைச் சேர்ந்த செல்வம் (27), ஆயன்குளத்தை சேர்ந்த முருகன் (23) ஆகிய 3 பேர் பலியானார்கள்.
விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளத்தை சேர்ந்த விஜய் (27) ஆகியோர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கல்குவாரி இடிபாடுகளிலிருந்து ஆறாவது நபரின் உடலை தீயணைப்பு துறையினர் கண்டறிந்துள்ளனர்.
கல்குவாரி இடிபாடுகளில் சிக்கிய 6 பேரில் 3 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆறாவது நபரின் உடல் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
தீயணைப்புத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தேசிய பேரிடர் படையினர் மீட்புப் பணியில் உருக்குலைந்து கிடந்த லாரியின் நடுவே ஆறாவது நபரின் உடலை கண்டறிந்துள்ளனர்.
முன்னதாக, இந்த கல்குவாரி விபத்து தொடர்பாக நான்குனேரி காவல் உதவி கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த குவாரி உரிமையாளர்கள் செல்வராஜ், அவரின் மகன் குமார் கர்நாடக மாநிலம் மங்களூருவில் வைத்து தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
English Summary
nellai quarry accident 6th member body find