நெல்லையில் இரு இளைஞர்களை அடித்து கொலை செய்த போலீஸ்! டிஎஸ்பி உள்ளிட்ட 10 போலீசார் குற்றவாளிகளாக அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி காவல் நிலையத்தில் இரண்டு விசாரணை கைதிகள் இறந்த வழக்கில், டிஎஸ்பி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டிஎஸ்பி பொன்னரசு உட்பட 10 போலீசார் மீது, 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு சிவந்திபட்டி காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மருதூரைச் சேர்ந்த முருகேசன், வாகைகுளத்தைச் சேர்ந்த மாணிக்கராஜ் ஆகியோர் காவல் நிலையத்திலேயே உயிரிழந்தனர்.

ஆனால், தியாகராஜ நகர் பகுதியில் விபத்தில் சிக்கி அவர்கள் உயிரிழந்ததாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தியன் விளைவாக, வழக்கு விசாரணை சிபிசிஐடி மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது சிபிசிஐடி போலீஸ் டிஎஸ்பி வினோதினி 600 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளார். 

முதல் குற்றவாளி டிஎஸ்பி பொன்னரசு மற்றும் 9 காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகள் என சேர்க்கப்பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai Sivanthipatti police custody death case Charge sheet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->