ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! மலிவு கட்டணத்தில் வந்தே பாரத் ரயில்! குஷியில் தென்னக மக்கள்! - Seithipunal
Seithipunal


இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்க உள்ளார். அதில் தமிழகத்தின் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயிலும் இடம் பெற்றுள்ளது. சென்னை திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கான கட்டணத்தை தென்னக ரயில்வே இறுதி செய்துள்ளது.

சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயிலில் இரண்டு வகையான கட்டணங்களை தென்னக ரயில்வே நிர்ணயித்துள்ளது. அதன்படி எக்ஸிக்யூட்டிவ் சேர் எனப்படும் ஏசி சொகுசு வகுப்பு வகையில் பயண கட்டணமாக ரூ.2, 391 நினைக்கப்பட்டுள்ளது.அதனுடன் முன்பதிவு கட்டணம், உணவு ஜிஎஸ்டி உள்ளிட்ட இதர கட்டணங்கள் சேர்த்து மொத்தமாக ரூ.3,025 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கேர் சேர் எனப்படும் சாதாரண வகுப்பு வகையில் பயண கட்டணமாக ரூ.1,172 உடன் முன்பதிவு கட்டணம் உணவு ஜிஎஸ்டி உட்பட அனைத்து கட்டணங்களும் சேர்த்து ரூ.1,620 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் கட்டணமானது விழா காலங்களில் தென் தமிழகத்திற்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மிகக் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் உள்ள 653 கிலோ மீட்டர் தூரத்தை மற்ற ரயில்கள் 12 மணி நேரத்தில் கடக்கும் நிலையில் இந்த வந்தே பாரத் ரயிலானது 8 மணி நேரத்தில் கடக்குமா வகையில்  திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரயிலானது விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் மொத்தம் உள்ள எட்டு பெட்டிகளில் 550 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்யலாம் எனவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai Vande Bharat train fare and other details announced


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->