ஆன்லைன்ல ஓட்டு.? "ஊருக்கு தான் உபதேசமா".!! ஜோதிகாவை ரவுண்டு கட்டும் நெட்டிசங்கள்.!! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா திருமணத்துக்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற போது செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற நடிகை ஜோதிகாவிடம் "தேர்தல் வந்தபோது நீங்கள் ஓட்டு போடவில்லை என உங்களை நிறைய பேர் விமர்சனம் செய்கின்றனர் இதற்கு உங்கள் பதில் என்ன.?" என கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த நடிகை ஜோதிகா "நான் வருஷ வருஷம் ஓட்டு போடுவேன்" என்று அப்போது அங்கிருந்தவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒருமுறை எனக் கூறியதை அடுத்து ஆமாம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் ஓட்டு போடுவேன். 

நான் என்ன சொல்றேன் ஏனென்றால் சில நேரங்களில் வெளியூரில் இருக்க வேண்டிய நிலை இருக்கும் வேலைக்காக உடல் நலக்குறைவால் இது நடக்கலாம். இது தனிப்பட்ட விஷயம். 

சில நேரங்களில் நாம் தனிப்பட்ட முறையில் வாக்களிக்கலாம். ஆன்லைனில் கூட இருக்குல்ல.. எப்போதும் எல்லாவற்றையும் பொதுவெளியில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. சில விஷயங்கள் தனிப்பட்டதாக இருக்கலாம். அதற்கு மரியாதை அளிக்க வேண்டும் என பதிலளித்தார். 

நடிகை ஜோதிகாவின் இந்த கருத்தை இணையதளவாசிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். புரட்சி, பகுத்தறிவு பேசும் நடிகை ஜோதிகா கூறும் உபதேசம் எல்லாம் ஊருக்கு தானா என இணையதள வாசிகள் கேள்வி எழுப்புகின்றனர். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது வெயிலின் தாக்கத்தின் காரணமாக தல்லாத வயதில் வந்து வாக்களித்த 3 முதியவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Netizens criticized actress jothikas online polling


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->