சர்வ அமாவாசையில்.. ₹1,000 திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு! இது தான் பகுத்தறிவா? நெட்டிசன்கள் கேள்வி!
Netizens criticized magalir urimai thogai begin on amavasai today
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாளை (செப்.15) மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரத்தியேக ஏடிஎம் கார்டை வழங்கி தொடங்கி வைக்க உள்ளார். காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்காக பல்வேறு ஏற்பாடுகள் அரசு சார்பில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பயனாளர்களின் வங்கிக்கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்படும் பணியை தமிழக அரசு இன்று தொடங்கியுள்ளது. நாளை முதல் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவார்கள் என எதிர்பார்த்து இருந்த குடும்ப தலைவிகளுக்கு இன்ப அதிர்ச்சியாகவே உள்ளது.
அதே வேளையில் சனாதன தர்மத்திற்கு எதிராகவும், பகுத்தறிவு குறித்துப் பேசும் திமுக ஆட்சியில் நல்ல நாள் பார்த்து இன்று சர்வ அமாவாசை நாளில் குடும்பத் தலைவிகளுக்கான உரிமை தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
அமாவாசைக்கு மறுநாள் அபசகுமான பிரதமை திதி நாளாக கருதப்படுவதால் இன்றே மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு பணம் செலுத்தும் பணியை தமிழக அரசு தொடங்கிவிட்டதா? இது சனாதனமா? பகுத்தறிவா? என இணையதளவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
கடந்த செப்டம்பர் 2ம் தேதி சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசு மகளிர் உரிமை தொகை திட்டத்தினை முன்கூட்டியே தொடங்கி வைத்திருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Netizens criticized magalir urimai thogai begin on amavasai today