உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு.!
New barometric depression is developing in TamilNadu
தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குளிர்காலம் முடிவடைந்து கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் ஏப்ரல் 6-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 5ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 6ம் தேதி முதல் வங்கக் கடலில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் தென் கிழக்கு பகுதிக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
New barometric depression is developing in TamilNadu