போலி செய்திகளைத் தடுக்க வாட்ஸ்-அப் சேனல் - தமிழக அரசு அதிரடி முடிவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் போலி செய்திகளை கண்டறிந்து உண்மையான தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க புதியதாக வாட்சப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

"தமிழ்நாடு அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் தகவல் சரிபார்ப்பகம் தினமும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வெறுப்புப் பிரசாரங்கள் மற்றும் போலி செய்திகளைக் கண்டறிந்து மக்களுக்கு உண்மையான தகவல்களைத் தரவுகளோடு பதிவிட்டு வருகிறது.

எனவே, சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள புதிய வாட்ஸ்-அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. அதில் உள்ள கியூ ஆர் கோட் குறியீட்டை ஸ்கேன் செய்து பின் தொடரலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new whatsapp chennal open for stop fake news


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->