தமிழக அரசின் புத்தாண்டு மது விற்பனையில் சாதனை.! நேற்று ஒரே நாளில் இத்தனை கோடிக்கு விற்பனையா?  - Seithipunal
Seithipunal


தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் தமிழக அரசால் நடத்தப்படும் மதுபான கடை யான டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் அமோகமாக நடைபெறும் (கவலைக்குரிய விஷயம் என்றாலும், இப்படி சொல்வதற்கு வருந்துகிறோம்). 

இதுபோன்ற விழாக்காலங்களில் தமிழக அரசு மதுபான வியாபாரத்தை பெருக்கும் நோக்கில், டாஸ்மார்க் கடைகளில் முன்னேற்பாடாக அதிகப்படியான மதுபானங்களை ஸ்டாக் வைத்துக்கொள்ளும். மேலும் பலதரப்பட்ட மதுபான வகைகளையும் விற்பனைக்கு கொண்டு வரும். 

அந்த வகையில் 2022 புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் தேவையான அளவுக்கு மது வகைகளை ஸ்டாக் வைத்துக் கொள்ள வைத்துக்கொள்ளவும், குறைந்த விலையில் உள்ள மதுபானம், அதிக விலையில் உள்ள மதுபானங்களை தமிழக அரசின் மதுபான கடை வாடிக்கையாளர்களுக்கு குறையில்லாமல் கொடுப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்தது.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவது 147.69 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

சென்னை மண்டலத்தில் 41.45 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது, திருச்சி மண்டலத்தில் 26 கோடி ரூபாயும், சேலம் மண்டலத்தில் 25 கோடி ரூபாயும், மதுரை மண்டலத்தில் 27 கோடி ரூபாயும், கோவை மண்டலத்தில் 26 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEW YEAR 2022 TASMAC SALE REPORT


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->