பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் - கவர்னர் மாளிகையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.!
NIA officers investigation in chennai governor house
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை மீது கடந்த மாதம் 25-ம் தேதி பெட்ரோல் குண்டுகளை வீச முயன்ற வாலிபரை பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும், அவரிடம் இருந்த இரண்டு பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர், போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
உடனே போலீசார், கருக்கா வினோத் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், அவர் மீது என்.ஐ.ஏ-வும் நவம்பர் 14- ம் தேதியன்று வழக்குப்பதிவு செய்தது.
இதையடுத்து, சென்னை காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒப்படைத்தது. இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தடவியல் நிபுணர்களுடன் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
NIA officers investigation in chennai governor house